கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு பிரதமர் அலுவலகம் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்த்தின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது,
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி, தேசிய கல்வி அமைச்சின் செயலாளர்,ஆளுனர் செயலாளர்,தலைமை செயலாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மாகாணத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.