கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று பன்னிரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இதேவேளை, வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாக நீடித்து வருகின்றது. அத்துடன் இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தபாலட்டை அனுப்பும் நடவடிக்கைகள் நான்காவது நாளாக இடம்பெறுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.