இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கைக்கு ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் 2 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரச தூதுக்குழுவின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றுள்ள அவர் ஜெனிவா வளாகத்தில் இலங்கை தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரச தலைவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும் நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்த அவர் நல்லிணக்க செயற்பாடுகளுகள் மெதுவாக முன்னெடுக்கப்பட்டாலும் அது முறையாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே நல்லிணக்க பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படுவது அவசியமானது எனவும் ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.