பெண்கள் உரிமைகள் தொடர்பில் இலங்கை உரிய கவனம் செலுத்துவதில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளுக்கு சமாந்திரமாக மனித உரிமை விவகாரங்கள் குறித்த குழு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான ஓர் அமர்வில் இலங்கைப் பெண்களின் உரிமைகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கத் தரப்பு உரிய பதில்களை அளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கப் பிரதிநிதிகள் இந்த அமர்வுகளின் போது ஆயத்தமாக வரவில்லை அல்லது கேள்விகளை உதாசீனம் செய்திருந்தனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அட்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
திருமணச் சட்டங்கள், காணி, வாழ்வாதாரப் பிரச்சினைகள், பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில் இலங்கை உரிய பதிலளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக உண்மையை கண்டறிந்து கொள்வதற்கான தற்போதைய முனைப்புக்களில் பெண்களின் பங்களிப்பு குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் பதில் எதனையும் அளிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.