160
பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது உரிய விதி முறைகள் பின்பற்றப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணைகள் தொடர்பிலான 1937ம் ஆண்டு 7ம் இலக்கச் சட்டத்தின் அடிப்படையில் பிணை முறிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ள மத்திய வங்கி நியதிகளைப் பின்பற்றி பிணை முறிகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் 1997ம் ஆண்டு முதல் இவ்வாறு பிணை முறிகள் விற்பனை செய்பய்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. சட்ட நியதிகளுக்குப் புறம்பான வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Spread the love