முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாபிலவில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிலக்குடியிருப்பு காணி கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கேப்பாபுலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து அரச தெரிவிக்கையில் , அங்குள்ள பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் விரைவில் இதன் அறிக்கையொன்று இராணுவத்தினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் வழங்கப்படும் எனவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார்