காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்பய்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதனை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் சட்டத்தரணி விஜித அல்விஸ் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 13 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்படுவதன் மூலம் படைவீரர்கள் காட்டிக் கொடுக்கப்படுவதாகவும் இந்த அலுவலகத்திற்காக அதிகாரிகளை நியமிக்கவும் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்பய்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.