ஊடகவியலாளர் கீத் நொயார் அடையாள அணி வகுப்பில் பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு கீத் நொயார் இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பிக்கும் நோக்கில் இன்றைய தினம் அடையாள அணிவகுப்பு ஒன்று நடத்தப்படவிருந்தது.
அடையாள அணி வகுப்பின் போது தாக்குதலுக்கு இலக்கான நொயார் பிரசன்னமாகியிருக்கவில்லை.
எனவே அடையாள அணி வகுப்பு எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.