பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தமைக்கு எதிரான புகார் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அளித்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விளக்கம் கோரியுள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்ததையடுத்து, புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எனினும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பில் விளக்கமளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது.
சசிகலா சிறையில் இருப்பதால் அவருக்குப் பதிலாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பினார்.
இந்நிலையில் தினகரன் அ.தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமான எந்த பதவியிலும் இல்லை என்பதனால் அவரது பதிலை ஏற்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதுடன் எதிர்வஐம் 10ம் திகதிக்குள்ள பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.