162
11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பாடசாலைகளைச் சேர்ந்த 11 பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இந்த கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love