ஊடக நிறுவனமொன்றும் ஊடகவியலாளர்களும் காவல் நிலையத்தில் பரஸ்பர முறைப்பாடுகளை செய்து கொண்டுள்ளனர். கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் காவல்துறையினர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சண்டே லீடர் பத்திரிகைக் குழுமத்தின் சகோதர பத்திரிகையான இருதின பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் காவல் நி;லையத்தில் பத்திரிகை அலுவலகத்தை பலவந்தமாக மூடி தம்மை வெளியேற்றியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை பத்திரிகையின் ஏனைய ஊடகவியலாளர்களை குறித்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தியதாக ஊடக நிறுவனத்தின் நிர்வாகம் குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்துள்ளது. எவ்வித எழுத்து மூல விளக்கமும் அளிக்கப்படாமல் இருதின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விலமநாத் வீரரட்ன பணி நீக்கப்பட்டிருந்த சம்பவத்தின் அடிப்படையில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாக விமலனாத் மீது பத்திரிகை நிர்வாகம் வாய்மொழி மூல குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், ஊடகவியலாளர்கள் பணி நீக்கப்பட்டமைக்கு ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.