சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என கட்சி தெரிவித்துள்ளது.
சில விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, சில முக்கிய விடயங்கள் நிறைவேற்றப்படாமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது.
காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம், சாட்சியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது. சிவிலியன் விவகாரங்களிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் படையினர் தொடர்ச்சியாக தலையீடு செய்து வரும் நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என தெரிவித்துள்ளது.