மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் இந்தியா – மியான்மர் எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 அளவில் பதிவாகி உள்ளது.
மணிப்பூர் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில், 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் 38 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல், இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.