புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் புதிய கட்சி ஒன்று உருவாகியுள்ளது. நேற்றையதினம் இது தொடர்பில் சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா,
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கட்சியை ஆரம்பித்து வைத்ததாகவும் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகளுக்கு அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டது எனவும் தங்களிடம் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற நிலையில் தமது போராளிகளின் முன்னேற்றத்துக்காகவும் தமிழ் மக்களின் இழந்த அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் கட்சியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் பிரதேசங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த அவர் ஆயுதபோராட்டம் என்பதனை இனி தம்மால் நினைத்துப் பார்க்கவும் முடியாது எனவும் தெரிவித்தார்.