219
யாழ் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு இன்று கிளிநொச்சி திருநகர் கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று 04-03-2017 பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு ஆரம்பமான கலைகதம்பம் இசை நடன சங்கமம் நிகழ்வில் விருந்தினர்கள் தமிழ் இன்னிய அணியிசையுடன் அழைத்து வரபட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள்,கலாமன்ற கலைஞர்கள் உள்ளிட்ட பலரின் சிறந்த இசை நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. வருடந்தோறும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தினரால் நடத்தப்படுகின்ற நிகழ்வானது இம் முறை இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ம. பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், ஒய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, காவேரி கலா மன்ற அருட்தந்தை கலாநிதி யோசுவா, கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் இறைபிள்ளை,ஒய்வுப்பெற்ற மின் பொறியியலாளரும் தமிழ்ச் சங்கத் தலைவருமான குமரிவேந்தன் மற்றும் மூத்த கலைஞர்களான வல்லிபுரம், நடராஜா, பார்வதி சிவபாதம், வேலாயுதம் உள்ளிட்ட கரைலஞர்கள் பெருமளவான பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
Spread the love