152
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்ய பிரஜைகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் ஒன்பது ரஸ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீசா சட்டங்களை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த ரஸ்யப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love