இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அதன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீட்டா இசாக் நாடியா தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த ரீட்டா இசாக்;, அது தொடர்பான அறிக்கையையும் ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் இம்முறை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில், அவை குறித்த நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.