ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில், இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பிலேயே நாளை கலந்துரையாடப்பட உள்ளது.
தீர்மானம் தொடர்பிலான உத்தேச வரைவுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து நாளை பேசப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு மற்றும் கலப்பு நீதிமன்றம் ஆகிய விடயங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் திருத்தங்களை செய்ய இலங்கை அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முனைப்புக்கள் வெற்றியடையக்கூடிய சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.