164
இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 125 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாக சசி வெல்கம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக வெல்கம கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து மில்லியன் ரூபாவிலான இரண்டு சரீர பிணையிலும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சசி வெல்கம வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love