தாமிரபரணி ஆற்றில் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது.
பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் கொடுத்தால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படும் எனத் தெரிவித்து இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில். பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதித்ததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும், குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரை கொடுக்கக்கூடாது என அவர்கள் குரலெழுப்பியதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.