140
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதினைந்தாவது நாளாக தொடர்கிறது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது வரையும் எவ்வித பதில்களும் கிடைக்காத நிலையில் இன்று பதினைந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது
Spread the love