194
பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையின் உதவி நாடப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சகல பாதாள உலகக் குழு செயற்பாடுகளையும் குறுகிய காலத்திற்குள் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினரையும், சட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா விஹாரை ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love