191
வடக்கில் மீளவும் சகோதரத்துவம் மலர வேண்டுமென அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதானஹிதான தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற முன்னதாக வடக்கில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர் எனவும், அண்மைக் காலமாகவே பிளவுகள் பேதங்கள் ஏற்பட்டதாகவும் முரண்பட்டுக்கொள்வதில் எவ்வித பயனும் லாபமும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
00
Spread the love