182
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபா முதல் 125 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மொத்த விற்பனை விலை ஒரு கிலோ 93 -95 ரூபாவிலிருந்து 105 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் அடிப்படையில் ஒரு கிலோ சீனி 93 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டியுள்ள போதும் மொத்த விற்பனை விலை 105 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love