பிணை முறி வர்த்தமானி வெளியீடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அதே தவறினை இழைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமது கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வழக்குத் தொடர உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கடந்த நாட்களில் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் வழக்குத் தொடரும் எண்ணத்தை மஹிந்த கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.2003ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலி;ருந்த போது அப்போதைய நிதி அமைச்சர் கே.என்.சொக்ஸி வெளியிட்ட பிணை முறி குறித்த ஆவணமொன்றில் 2013ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடும் திகதியாக 2013 ஜனவரி மாதம் 1ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆவணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.