மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வீசா வழங்கத் தேவையில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்தும் பொருட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவினை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தற்போது 1.6 மில்லியனை தாண்டியுள்ளதாகவும் மனிதாபிமான அடிப்படையில் வீசாக்கள் வழங்கப்பட்டால், அது குடியேற்றவாசிகளின் வருகையை தூண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து பெல்ஜியம் வந்த குடும்பம் ஒன்று அவர்களது உறவினர்களுடன் தங்கும் பொருட்டு விண்ணப்பித்திருந்த விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.