156
இந்தியாவின் கேரளாவில் இருக்கும் தலச்சேரி; புகையிரத நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புகையிரநிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள் தண்டவாளத்தின் அருகே புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ம்திகதி இதே பகுதியில் இடம்பெற்ற இரண்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Spread the love