149
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தடை உத்தரவிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஆறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாத வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 90 நாட்கள் தற்காலிக அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இந்த தடை உத்தரவு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் நியாயமற்றது என சூடானும் சோமாலியாவும் தெரிவித்துள்ளன.
Spread the love