பாகிஸ்தான் தற்காலிக அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடனான எல்லையை திறந்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான இரண்டு எல்லை நுழைவாயில்களை பாகிஸ்தான் தற்காலிக அடிப்படையில் திறந்துள்ளது.
இரண்டு நாடுகளையும் சேர்ந்த சட்ட ரீதியான வீசா உடையவர்கள் இடம் நகர்வதற்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Torkham மற்றும் Chaman ஆகிய எல்லை நுழைவாயில் பகுதிகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் தொடர் தற்கொலைக் குண்டுத் தக்குதல்களை அடுத்து இந்த நுழைவாயில்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளையும் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.