164
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை கண்டியில் மே தினக் கூட்டத்தை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கெட்டம்பேயிலிருந்து பேரணியாக சென்று கண்டி போகம்பரை மைதானத்தில் பிரதான மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இம்முறை மே தினக் கூட்டத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்த கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love