கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதஉ ரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை அமைக்க முடியாது எனவும் அது அரசியல் சசானத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லாத போது எவ்வாறு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்