153
இந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கை கடற்படைத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாக கடற்படையினர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
Spread the love