157
நயினாதீவு கடற்பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கபட்டு உள்ளன. நயினாதீவு மேற்கு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு உரிய பொதிகள் கரை ஒதுங்கியுள்ளதனை கண்ணுற்ற ஊரவர் ஒருவர் அது தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்தை அடுத்து குறித்த பொதிகளை மீட்டபோது அவற்றுள் கேரளா கஞ்சா காணப்பட்டு உள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பொதிகளை காவல்துறையினர்மீட்டு சென்று உள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் பத்து எனவும் அவை 51 கிலோ எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.
Spread the love