171
வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (புதன்கிழமை) பூநகரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வாகனம் ஒன்றின் மூலம் வெள்ளாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட மேற்படி மரக்குற்றிகள் 3 லட்சம் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த மரக்குற்றிகளும், வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Spread the love