ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள மிகப் பெரிய ராணுவ வைத்தியசாலையான சர்தார் தவூத் கானுக்குள் வைத்தியர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் மேற்கொண்ட 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அப்கான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் பெரிய ராணுவ வைத்தியசாலைக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள மிகப் பெரிய ராணுவ வைத்தியசாலையான சர்தார் தவூத் கானுக்குள் வைத்தியர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர் . தொடர்ந்து அங்கு மோதல்கள் இடம்பெற்று வருவதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் சுமார் 400 படுக்கையறைகள் இருக்கின்றன எனவும் இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளே பல தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் உலங்குவானூர்தி மூலம் வந்த படையினர், மொட்டை மாடி பகுதியினூடாக உள்ளே சென்றுள்ளதாகவும் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்தும் மோதல்கள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.