கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தன்னுடைய சாட்சியங்களை பதிவு செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது கணவரின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருந்த போதிலும், தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தன்னை கைவிட்டுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.