குவாத்தமாலாவில் அரசாங்கம் நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் குறைந்தது 20 சிறுமிகள் உயிரிழந்தமைக்கான காரணங்களை உடனடியாக புலனாய்வு மேற்கொள்ள வேண்டுமென குவாத்தமாலா நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒரு கலவரத்தின்போது தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் குழு ஒன்று பஞ்சு மெத்தைகளில் தீப்பற்ற வைத்திருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 400 குழந்தைகளை தங்கக் கூடிய இந்த இல்லத்தில் கடந்த ஆண்டு 700 குழந்தைகள் தங்கியிருந்ததாக குறித்த குழந்தைகள் இல்லத்தில் காணப்படும் நிலைமைகள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை அங்கு இதன் காரணமாக 3நாள் தேசிய துக்கதினங்களான அறிவிக்கப்பட்டுள்ளது.