171
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் காணி அனுமதி, வீட்டுத்திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மேற்க்கொண்டு வரும் கவனயீர்ப்பு: போராட்டம் நியாயமானது அதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை ஆறாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிவபுரம், நாதன் குடியிருப்பு, உழவனூர் மக்களின் பிரச்சினைகளையும் உரிய மட்டங்களுக்கு எடுத்துச் சென்று பல அழுத்தங்களை கொடுத்து காணி அமைச்சின் உயரதிகாரிகளை கிளிநொச்சி அழைத்து வந்து மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடச் செய்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தோம், தற்போது மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் வீட்டுத்திட்ங்கள் அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறே பன்னங்கண்டி மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக என்னால் தொடர்ந்து பணிகளை முன்னெடுக்க முடியாது போய்விட்டது. இருந்த போதும் அதிகாரம் இல்லை என்பதற்காக முயற்சி செய்யாது இருந்துவிடப் போவதில்லை கடந்த காலங்களில் ஏற்பட்ட அறிமுகங்கள் தொடர்புகள் ஊடாக பன்னங்கண்டி மக்களின் பிரச்சினைகள் உரிய மட்டங்களுக்குஎடுத்துச்செல்லப் படும். இருந்த போதும் கட்நத காலங்கள் போன்று உறுதியான முடிவுகள் எதனையும் என்னால் வழங்க முடியாது மக்களுக்கான எனது முயற்சிகளை கைவிடப்போவதில்லை. எனத் தெரிவித்தார்
Spread the love