180
நேபாளத்தில் 60 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேற்கு நேபாளத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேரூந்து , வீதி மேடும் பள்ளமுமாக இருந்ததன் காரணமாக பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேரூந்து மிக வேகமாக சென்றதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love