156
பாடசாலைகளில் 13 ஆண்டுகள் மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய வகையில் புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
தரம் எட்டு அல்லது சாதாரண தரத்துடன் அதிகளவான மாணவ மாணவியர் பாடசாலைகளை விட்டு இடைவிலகிச் செல்வதாகவும் இவ்வாறானவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுவதாகவும் தெரிவித்த அவர் தொழில்சார் தகுதிகளை உடையவர்கள் சிறந்த ஊதியம் ஈட்டக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love