231
சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் இறால் பிடிக்க சென்ற கிளிநொச்சி கண்ணகி நகரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிகிழமை காலையில் இறால் பிடிப்பதற்காக சென்ற குறித்த நபர் மாலை வேளையாகியும் குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து தேடப்பட்ட போது சுண்டிக்குளம் கடல் நீரேரியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love