நாட்டின் பொருளாதாரப் பின்னடைவிற்கு கடந்த அசராங்கத்தின், பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாக ஆட்சி அமைக்கும் வலு இருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அளித்த வாக்குறுதிக்கு அமைய கூட்டு அரசாங்கமொன்றை அமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் நாடு பொருளாதார ரீதியில் நட்டமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.