157
நேற்றைய தினம் ஆரம்பமான கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. ஆயிரக் கணக்கான இந்திய பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பவது வழமையானதாகும். இந்த ஆண்டு திருவிழாவில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் பங்கேற்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய இலங்கை பக்தர்கள் பத்தாயிரம் பேர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை என கடற்படைப் பேச்சாளர் சந்திம வலாகுலகே தெரிவித்துள்ளார்.
Spread the love