185
முன்னாள் அமைச்சரும், மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவியுமான ரேணுகா ஹேரத் காலமானார். நோய் வாய்ப்பட்டிருந்த ரேணுகா ஹேரத் கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார் என தெரிவிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு பிறந்த ரேணுகா ஹேரத், தனது 72ம் வயதில் காலமானார்.
1977ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுன்றிற்கு தெரிவான ரேணுகா ஹேரத், ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் அரசியல்வாதிகளில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை வலப்பனையில் நடைபெறவுள்ளது.
Spread the love