கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது குறிப்பிட்டுள்ளார்.
படகு மீது எச்சரிக்கை வேட்டுக்களை தீர்க்கக்கூடிய கடற்படைத் தளபதியின் அனுமதி தேவை எனவும் அவ்வாறான அனுமதியை தாம் ஒருபோதும் வழங்கியதில்லை எனவும் இந்த துப்பாக்கிச் சூட்டு குற்றச்சாட்டு குறித்த விபரங்கள் இந்திய தரப்பினரிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய ராடார் தகவல்கள் மற்றும் ஜீ.பி.எஸ் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.