இலங்கை குறித்த உத்தேச தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையில் நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமைகள்’ என்ற தொனிப்பொருளில் இந்த உத்தேச பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியா, அமெரிக்கா, வட அயர்லாந்து, மொன்டன்கிரோ, மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன. நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தேச தீர்மானத்தில் திருத்தங்களை செய்வதற்கு எதிர்வரும் 21ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.