கோவாவில் மொத்தமாகவுள்ள 40 பேரவை தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியுமே வெல்ல முடியவில்லை.
இந்தநிலையில் சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரிய பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளதுடன் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். இந்தநிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசைதான் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் , எந்த கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என நீதவான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றே கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், சபாநாயகரை உச்சநீதிமன்றமே நியமிக்கும் என்றும் நீதிபதிகள உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். அத்துடன் ஆளுநர் தீர்மானித்தபடி பாஜகவுக்கே முதல் வாய்ப்பு என கூறிய உச்நீதிமன்றம் இன்றே பாஜக அதை நிரூபிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.