ஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அமைப்புக்கள் வருகை தந்திருந்த நிலையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது
நீங்கள் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சிலரால் ஈ.பி.டி.பி யும் தொடர்வுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப் படுகின்றது இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்
ஈ.பி.டி.பி கட்சியில் நான் இப்பொழுது இல்லை ஆகவே ஈ.பி.டி.பி சார்பாக என்னால் பதில் சொல்ல முடியாது ஆனால் ஈ.பி.டி.பி யில் இருந்தவர்கள் அவ்வாறான விடயங்களில் சம்பந்தப் பட்டிருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் ஈ.பி.டி.பி யில் இருந்த காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றேன் எனவும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஈ.பி.டி.பி சில மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டது தொடர்பாக இப்பொழுது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடைபெறுகின்றது எனவும் சிலர் தண்டனையும் பெற்றிருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் சட்டரீதியாக அணுகப்பட்டு யார் பிழை செய்திருந்தாலும் கடந்தகாலத்தில் ஈ.பி.டி.பி மட்டுமல்ல பல போராட்ட இயக்கங்கள் பல மனித உரிமை மீறல்களால் நீதி ஊடாக தண்டனை பெற்றுள்ளார்கள் எனவும் இதில் ஈ.பி.டி.பி விதிவிலக்காக இருக்க முடியாது எனவும் தெரிவித்த அவர் ஈ.பி.டி.பி தவறுவிட்டிருந்தால் தவறுவிட்டதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் படவேண்டும் என்பதில் எந்தவிதமாக மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் தெரிவித்தார்