கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி கடந்து பத்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை காணி உரிமையாளரான சிவாபசுபதி அவர்களின் சகோதரனின் மகளான வைத்தியர் மாலதிவரன் பன்னங்கண்டி கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் நிலைமைகளை அறிந்துகொண்டுள்ளார்.
இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு பன்னங்கண்டி கிராமத்திற்கு சென்ற வைத்தியர் மாலதி அவர்கள் மக்களுடன் உரையாடி அவர்களின் வீடுகளுக்குச் சென்று நிலைமைகளை நேரில் கண்டுகொண்டதோடு தான் தனது சிறிய தந்தையான பசுபதி அவர்களுடனும், ஏனைய உறவினர்களுடனும் பேசிவிட்டு ஒரு சில நாட்களுக்குள் நல்ல தீர்வை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார்.