தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக் கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது எனக் கோரி மனுவொன்று நெதர்லாந்தைச் சேர்ந்த நான்கு ஈழத் தமிழர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுக்காக நிதித் திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்களது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அன்றி, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என இலங்கைத் தமிழர்கள் சார்பில் வாதப்பட்டது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்துள்ளது.